கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து 3819 கிராம் தங்கம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!

புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நகை மதிப்பீட்டாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 67 லட்சம் மதிப்பிலான 3819 கிராம் தங்க நகைகள் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆவாரம்பாளையம் சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நகை மதிப்பீட்டாளராக கார்த்திக் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் பல்வேறு தருணங்களில் நகைகளை பொதுமக்கள் அடகு வைத்த போது, போலி நகைகளை மாற்றி வைத்து கார்த்திக் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, 3819 கிராம் தங்க நகைகளை மோசடி செய்ததாக கார்த்திக் மீது வங்கி மேலாளர் ஜெய்ராம் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...