ஈஷாவின் மண் வளம் காப்போம்: 27 நாடுகளுக்கு மோட்டர் சைக்கிள் பயணம் - திட்டத்தை கோவையில் துவக்கி வைத்து சத்குரு பேச்சு

ஈஷா சார்பில் மண் காப்போம் என்ற இயக்கம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இதில், ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.



கோவை: ஈஷா சார்பில் மண் காப்போம் என்ற இயக்கம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இதில், ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.



அப்போது பேசிய அவர், மண் காப்போம் இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். நம்மிடம் 60-80 பயிர்கள் தான் உள்ளது என்கின்றனர். 2045 க்குள் உணவு தயாரிக்கும் சக்தி 40% குறைந்து விடும் என கூறப்படுகிறது. மக்கள் தொகை 9 பில்லியனுக்கு மேல் வளர்ந்து வரும் நிலையில், மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இருப்பினும், இதை மீட்டுடெடுக்க வாய்ப்பு இருக்கின்றது.

சில திட்ட மாற்றங்கள் மூலம் மண்வளம் பாதுகாக்க முடியும். இது குறித்து, உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன். மண்ணில் உள்ள உயிர்கள் குறித்து தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.



மேலும், 3 தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.

இசை, சினிமா, விளையாட்டு என அனைத்து துறை வல்லுனர்களும் நம்முடன் இருக்கின்றனர். வரும் 21ம் தேதி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளேன்.



இந்நேரத்தில் பல சவால்களை கடக்க வேண்டும் என்றும் பனி, வெயில், மழை, போர் என அனைத்து சூழல்களையும் கடந்து இந்த பயணம் இருக்கும். கடந்த 2 வருடத்தில் எங்கே போனாலும் மண் பாதிப்பு தெரிகின்றது. பூனைக்கு மணி கட்ட ஒருவர் தேவை என்பதற்காக நான் இதை செய்கின்றேன்.

நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணை காக்க வேண்டும் 84 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு போகின்றது. மண்ணில் இருக்கும். உயிர்சத்து 68% ஆக இருக்கின்றது. இதை 8 முதல் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். உயிர்சக்தி வந்து விட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயம் 30 லிட்டரில் செய்ய முடியும். மண் சத்தும் கொண்டு வர வேண்டும்", என்று சத்குரு பேசினார்.



உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு, மத்திய அரசுடன் சேர்ந்து ஈஷா தன்னார்வலர்கள் தங்குமிடம், போக்குவரத்து போன்ற உதவிகளை செய்து வருகின்றோம். இன்னும் 11 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கிருப்பதாகவும் கூறினார்.

தற்போது, உக்ரைனில் ஏற்பட்டு இருப்பது கஷ்டமான நிலை. உக்ரைனில் நிற பிரச்சினை இருக்கின்றது. தோலை பார்த்து யாரும் ரயிலில் ஏற்றுவதில்லை. ரஷ்யா வழியாக கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி என கூறிய அவர், தூரம் அதிகம் என்றாலும் அது பாதுகாப்பானது, என தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் அரசியல் தேர்தல் கிடையாது என கூறிய அவர் தனி நபர்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால், அந்த ஊரில் யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள், என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...