தலைமையை மீறி செயல்பட்ட திமுகவினர் உடனடியாக பொறுப்பை விட்டு விலக வேண்டும்: முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!

தலைமையை மீறி தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் எனவும், பொறுப்பிலிருந்து விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை: தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்றனர்.

இருப்பினும், சில இடங்களில் தலைமையை மீறி திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.

அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...