கோவை அன்னூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவினரிடையே மோதல்..!

இரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருவதால், அன்னூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை அன்னூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக - 7, சிபிஎம் - 2, காங்கிரஸ் - 1, பிஜெபி - 1, சுயேச்சை - 4, இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

திமுகவில் நகரச்செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் சமீபத்தில் திமுகவில் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அன்னூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் வேட்பாளராக திமுக சார்பில் வெற்றி பெற்ற விஜயகுமார் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்‌.



விஜயகுமாருக்கு சுயேச்சைகள் ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில், பரமேஸ்வரனும் மனு தாக்கல் செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு அலுவலகத்தில் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அன்னூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...