கோவை பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் திமுக தலைமை அறிவிக்காத வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி - சான்றிதழ் வழங்க தாமதப்படுத்துவதால் பரபரப்பு..!

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் திமுக தலைமை அறிவிக்காத வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



கோவை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு 15 வார்டுகளையும் திமுக உறுப்பினர்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று பேரூராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், திமுக அறிவித்த தலைவர் வேட்பாளர் ராகினி 7 வாக்குகள் பெற்ற நிலையில், தலைமை அறிவிக்காமல் திமுக சார்பில் போட்டியிட்ட வனிதா 8 வாக்குகள் பெற்று உள்ளார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவில் உள்ள இருதரப்பும் பேரூராட்சி அலுவலக வளாகத்தின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...