கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின நாளை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம்..!

“அழிவின்‌ விளிம்பில்‌ மனிதர்களா? விலங்குகளா?” என்னும்‌ தலைப்பில்‌ இந்த சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின நாளை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கோவை பாரதியார்‌ பல்கலைக்கழக விலங்கியல்‌ துறை சார்பில்‌, இயற்கை மன்றம்‌ மற்றும்‌ ஓசை அமைப்பு ஒருங்கிணைந்து, “உலக வன உயிரின நாள்‌" (03/03/2022) அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை துணைவேந்தர்‌ முனைவர்‌. பி. காளிராஜ்‌ தலைமை தாங்கினார்‌. அதில்‌ இயற்கையின்‌ இன்றியமையா தேவைகளையும்‌, அவற்றைப் பாதுகாப்பதன்‌ முக்கியத்துவத்தையும்‌ விரிவாக எடுத்துரைத்தார்‌.



இவ்விழாவில்‌ பதிவாளர்‌ முனைவர்‌. கே. முருகவேல்‌ அவர்கள்‌, விலங்கினங்களின்‌ தனித்துவத்தை மிகவும்‌ அழகாக எடுத்துரைத்தார்‌. பல்கலைக்கழகம்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ விலங்கியல்‌ துறை மாணவ, மாணவிகள்‌ பங்கேற்றனர்.

விலங்கியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ மா. ரமேஷ்‌ அவர்கள்‌ வரவேற்புரை வழங்கினார்‌. உலக வன உயிரின நாள்‌ குறித்து, முனைவர்‌. சி. குணசேகரன்‌ அவர்கள்‌ சிறப்புரையாற்றினார்‌. இவ்விழாவின்‌ சிறப்பு அம்சமாகப்‌ பட்டிமன்றம் நடைபெற்றது.



ஓசை அமைப்பின்‌ தலைவர்‌, காளிதாசன்‌ அவர்கள்‌ பட்டிமன்ற நடுவராகத்‌ தலைமை தாங்கினார்‌. “அழிவின்‌ விளிம்பில்‌ மனிதர்களா? விலங்குகளா?” என்னும்‌ தலைப்பில்‌ நடந்தேறிய பட்டிமன்றத்தில்‌, அழிவின்‌ விளிம்பில்‌ மனிதர்களே! என்னும்‌ தலைப்பில்‌ மாணவிகள்‌ செளமியா, ஸ்ரீ தேவி மற்றும்‌ சந்தியா ஆகியோரும்‌, அழிவின்‌ விளிம்பில்‌ மனிதர்களே! என்னும்‌ தலைப்பில்‌ தண்டபாணி, ஸ்ரியா மற்றும்‌ வாசுகி ஆகியோர்‌ தங்கள்‌ கருத்துக்களை ஆணித்தரமாக ‌ பதித்தனர்‌.

இறுதியாக, அழிவின்‌ விளிம்பில்‌ விலங்குகளும்‌; பேரழிவின்‌ விளிம்பில்‌ மனிதர்களும்‌ உள்ளனர்‌ என்னும்‌ தொலைநோக்குப்‌ பார்வையுடன்‌ நடுவர்‌ தீர்ப்பு வழங்கினார்‌. இவ்விழாவினை இரண்டாம்‌ ஆண்டு விலங்கியல்‌ துறை மாணவி, துர்கா மற்றும்‌ மாணவர்‌ அருண்‌ தொகுத்து வழங்கினர்‌. இறுதியாக, இயற்கை சங்கத்தின்‌ தலைவர்‌, மாணவர்‌ ச. கரண்‌ நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...