பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.ஜி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம்

இரண்டாவது நாளாக இந்த போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தப்படித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பி.எஸ்.ஜி கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



கல்லூரியில் 70-ஆசிரியர் பணியிடங்கள் 42-அலுவலக பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் பணி பழுவை சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டும், பணியிடத்தைக் குறைக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், மாணவர்களிடம் SEED FUND-வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும், கல்லூரி முதல்வர் ஆசிரியர்களையும் மாணவர்களைச் சந்திக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.



இரண்டாவது நாளாக இந்த போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தப்படித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் அரசு உதவி பெறும் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றக் கல்லூரி நிர்வாகம் முயல்வதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...