தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டு‌ கழகத்தின்‌ பல்வேறு திட்டங்கள்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்துடன்‌ கொடிசியா இணைந்து அந்த நிறுவனத்தின்‌ பல்வேறு திட்டங்கள்‌ குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.


கோவை: தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்துடன்‌ கொடிசியா இணைந்து அந்த நிறுவனத்தின்‌ பல்வேறு திட்டங்கள்‌ குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வை 02.03.2022 புதன்கிழமை கொடிசியா நிர்வாகிகள்‌, முன்னாள்‌ தலைவர்கள்‌, மூத்த உறுப்பினர்கள்‌, செயற்குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ கொடிசியா உறுப்பினர்களோடு, சகோதர தொழில்‌ அமைப்புகளின்‌ நிர்வாகிகளும்‌ கலந்து கொண்டனர்‌.

கொடிசியா தலைவர்‌ எம்‌.வி.ரமேஷ்‌ பாபு நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்ட அனைவரையும்‌ வரவேற்றார்‌. நிகழ்வின்‌ சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்தின்‌ தலைவரும்‌ நிர்வாக இயக்குநருமான ஹன்ஸ்ராஜல்‌ வர்மா, ஐஏஎஸ்‌ கலந்துகொண்டார்‌. அவர்‌ பேசும்போது, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌, நிதி உதவி பெறுவதில்‌ அவை சந்திக்கும்‌ சிக்கல்களைப்‌ பற்றி எடுத்துரைப்பதோடு, மற்ற குறைகளையும்‌ அரசுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்‌.

இதுபோக இந்த நிகழ்வில்‌ கலந்துகொண்ட பார்வையாளர்களிடமும்‌ இருந்தும்‌ ஆலோசனைகளை வரவேற்பதாகக்‌ கூறினார்‌. அந்த குறைகளை விரைந்து தீர்ப்பதாக, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ தயாராக இருப்பதாகவும்‌ கூறினார்‌.

தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்தின்‌ இயக்குநர்‌ 19.சீனிவாசன்‌ நிகழ்வில்‌ பேசினார்‌. தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழக மண்டல மேலாளர்‌ ரமேஷ்‌ அந்த நிறுவனத்தின்‌ பல்வேறு நிதி வசதி திட்டங்களைப்‌ பற்றி எடுத்துக்‌ கூறினார்‌. கலந்து கொண்டவர்களின்‌ பல்வேறு சந்தேகங்களுக்கும்‌ அங்கே பதிலளிக்கப்பட்டது. இறுதியாக கொடிசியாவின்‌ கெளரவச்‌ செயலாளர்‌ எம்‌.கார்த்திகேயன்‌ நன்றி கூறினார்‌.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...