திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மொத்த அரிசி மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் அரிசிக் கடை வீதியில் 50க்கும் மேற்பட்ட அரசி கடைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் 5, 10 மற்றும் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றியும், இறக்கியும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வருடந்தோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அரிசி மண்டி உரிமையாளர் சங்கத்தினர் மூலம் ஒப்பந்தமாக நிறைவேற்றப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்தி காலம் தாழ்த்தாது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர், மொத்த அரிசி மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...