தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பு..!

மன அழுத்தம், தூக்கமின்மை, விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் காவலர்களுக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.


கோவை: தமிழகத்தில் பல்வேறு காரணங்களினால் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மன அழுத்தம், தூக்கமின்மை, உயரதிகாரிகளின் சித்திரவதை மற்றும் விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர். பத்து பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மாரடைப்பால் 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்டநாள் உடல்நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020ல் 337 காவலர்கள் மற்றும் 2021ல் இறப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...