கோவை ரத்தினபுரி அருகே மருந்துக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அபகரிப்பு..!

மருந்துக்கடை கட்டட உரிமையாளர் கடையை காலி செய்யுமாறு கூறி ஏற்பட்ட தகராறில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகளை அபகரித்த கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் மருந்துக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகளை அபகரித்த வழக்கில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம், ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (62). இவர் ரத்தினபுரி, சிவானந்தா காலனி, ராஜூ நாயுடு லே அவுட்டில் பிரதீப் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், 35 ஆண்டுகளாக மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கட்டட உரிமையாளர் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே, பிரதீப் மற்றும் இருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து சீனிவாசனை மிரட்டி, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பிரதீப், அவரது மனைவி மற்றும் நண்பர் முத்து பாண்டி ஆகியோர் மீது கொலை மிரட்டல், திருட்டு உள்பட 5 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...