பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி..!

வரகளியாறு பயிற்சி முகாமில் வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலி.


கோவை: கோவை பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை வனத்துறையினர் மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை வரகளியாறு பயிற்சி முகாமில், பிரத்தியேக கூண்டு அமைத்து அதில் அடைத்தனர்.

மேலும், வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.



தற்போது, மருத்துவக் குழு சார்பில் இறந்த யானைக்கு உடல்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு, யானை இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...