ஈஷாவில்‌ கர்நாடக இசை நிகழ்ச்சியுடன்‌ தொடங்கிய 'யக்ஷா‌' திருவிழா

முதல்‌ நாளான இன்று சர்வதேச அளவில்‌ பல்வேறு நாடுகளில்‌ இசை நிகழ்ச்சி நடத்தி வரும்‌ கர்நாடக இசை கலைஞர்‌ அபிஷேக்‌ ரகுராம்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை: மஹாசிவராத்திரியையொட்டி கோவை ஈஷாவில்‌ ஆண்டுதோறும்‌ நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலை திருவிழா இன்று (மார்ச்‌ 2) சிறப்பாக தொடங்கியது.

முதல்‌ நாளான இன்று சர்வதேச அளவில்‌ பல்வேறு நாடுகளில்‌ இசை நிகழ்ச்சி நடத்தி வரும்‌ கர்நாடக இசை கலைஞர்‌ அபிஷேக்‌ ரகுராம்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன்‌ ஹெச்‌.என்‌.பாஸ்கர்‌ வயலினும்‌, அனந்த கிருஸ்ணன்‌ அவர்கள்‌ மிருதங்கமும்‌ இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்‌.

சங்கீத நாடக அகாடமியின்‌ உஸ்தாத்‌ பிஸ்மில்லா கான்‌ யுவ புரஸ்கார்‌ விருது, யோகம்‌ நாகஸ்வாமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அபிஷஸேக்‌ நியூயார்க்‌, லண்டன்‌, சிங்கப்பூர்‌, பாரீஸ்‌ உள்ளிட்ட நகரங்களில்‌ முக்கிய இசை நிகழ்ச்சிகளில்‌ பங்கேற்று பாடிய சிறப்புமிக்கவர்‌.



பாரதத்தின்‌ பாரம்பரிய இசை மற்றும்‌ நடனங்களை மக்கள்‌ ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ இந்த யக்ஷா கலை திருவிழா 3 நாட்கள்‌ தினமும்‌ இரவு 7 மணிக்கு ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது. மார்ச்‌ 3-ம்‌ தேதி வித்வான்‌ குமரேஷ்‌ மற்றும்‌ விதுஹி ஜெயந்தி குமரேஷ்‌ அவர்களின்‌ வயலின்‌ நிகழ்ச்சியும்‌, மார்ச்‌ 4-ம்‌ தேதி புன்யா டான்ஸ்‌ கம்பெனியின்‌ பரத நாட்டிய நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து மார்ச்‌ 5-ம்‌ தேது முதல்‌ 8-ம்‌ தேதி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும்‌ கோலாகலமாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தினமும்‌ ஆதியோகி தரிசனமும்‌ நடக்கும்‌.

இந்நிகழ்ச்சிகளை Sadhguru Tamil யூ- டியூப்‌ சேனலில்‌ இணையதளம்‌ வாயிலாக கண்டு களிக்கலாம்‌.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...