'சிக்கன் 65' கேட்டு தகராறு: ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி... தப்பியோடிய 2-வாலிபர்களுக்கு வலைவீச்சு..!

கோவை சரவணம்பட்டி அருகே சிக்கன் 65 இல்லை எனக் கூறியதால் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கிய 2-வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் சாப்பிடச் சென்ற வாலிபர்களுக்கு சிக்கன் 65 தீர்ந்துவிட்டது என கூறிய ஓட்டல் உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாச புரத்தைச் சேர்ந்தவர் குருநாத் வயது 40, இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். 2-பேர் இவரது கடைக்கு இரவு சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குருநாத் தோசை இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் சிக்கன் 65 உள்ளதா? என கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...