பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோயில் நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை: ஆனைமலையில், பழமை வாய்ந்த தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி, கொடியேற்றத்திற்காக 70-அடி நீளம் கொண்ட மூங்கில் கொடிமரம் கொண்டு வரப்பட்டு ஆனைமலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 9-மணிக்குக் கோயில் வளாகத்தில், கொடிக்கம்பத்திற்குப் பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் வளாகம் முன்பு கொடிமரம் ஏற்றப்பட்டது. கொடிமரம் ஏற்றும்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, 8-ம் தேதி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 17-ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 1-மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும் நடக்கிறது. 18-ம் தேதி மாலையில் தேர்த் திருவிழா நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து, குண்டம் நோக்கி இழுத்து வருவார்கள். பின்னர், அன்று இரவு 9-மணிக்குக் குண்டம் பூ(அக்னி) வளர்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மறுநாள் 19-ம் தேதி காலை 7-மணிக்கு, விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 20-ம் தேதி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், 21-ம் தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.