திருப்பூர் மாநகராட்சியில் 60 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு..!

60 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தேர்வான 60 மாமன்ற உறுப்பினர்களும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், 60 வார்டுகளில் தேர்வான உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.



இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



ஒவ்வொரு உறுப்பினர்களாக வந்து உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சியில் திமுக 24 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் சி.பி.ஐ - 6, சி.பி.எம் - 1, மதிமுக - 3, காங்கிரஸ் - 2, IUML - 1 , மனித நேய மக்கள் கட்சி - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல், அதிமுக - 17, தமிழ் மாநில காங்கிரஸ் - 1, பா.ஜ.க - 2, சுயேட்சைகள் - 2 பேர் என மொத்தம் 60 நபர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் போது உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின் இன்குலாப் ஜிந்தாபாத் என்றும், பா.ஜ.க உறுப்பினர்கள் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதிரம் என்றும் கூறினர்.

அதே போல், ஒரு சில திமுக உறுப்பினர்கள் அவர்களின் தலைவர் மீது ஆணையிட்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...