தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை துவக்கம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம், மற்றும் கூடுதல் விபரங்களை www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கோவை: தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, எம்.பி.ஏ. - எம்.சி.ஏ. - எம்.எஸ்சி. ஆகிய முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ. படிப்பில் பொது மேலாண்மை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், மனிதவளம், நிதி சேவை, மருத்துவ சேவை, சுற்றுலா மற்றும் இயக்க மேலாண்மை என எட்டு வகை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் பட்டப் படிப்பு படித்தவர்கள் எந்த நுழைவுத் தேர்வும் இன்றி எம்.பி.ஏ. படிப்பில் சேரலாம். எம்.எஸ்சி.யில் கணினி அறிவியல் பாடப்பிரிவு நடத்தப்படுகிறது.

எம்.சி.ஏ.வில் சேர இந்த மாதம் 27ல் அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி இயக்குனரகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

மேலும், வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...