சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
கோவை: ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதால், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
கடந்த 8-ஆண்டுகளாகக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு பலகட்ட போராட்டம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளது. அதன்படி சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23-சதவீதவும் இதர ரகத்திற்கு 20-சதவீதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.