கோவை மாவட்டத்திற்காக 8-ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பம்பட்டி பிரிவு, மண்ணூர், அரசூர், சுங்கம் மற்றும் அத்திப்பாளையம் ஆகிய 7-இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இருக்கும் என தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்திற்காக 8-ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு சார்பில் 7-ஆம்புலன்ஸ்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அதனையடுத்து Bosch-என்ற தனியார் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 1-ஆம்புலன்ஸையும் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பம்பட்டி பிரிவு, மண்ணூர், அரசூர், சுங்கம் மற்றும் அத்திப்பாளையம் ஆகிய 7-இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இருக்கும் என தெரிவித்தார்.
ECRC-திட்டத்தின் கீழ் 140-க்கும் மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்றவர்களை மீட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார். தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை 63747-13767என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. குறிப்பாகப் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ளவர்களை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் கவனத்து கொள்ளலாம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் டெலி கவுன்சிலிங் யூனிட் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.