கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கொங்கு தமிழர் பேரவை நிறுவனர் மீது வழக்குப்பதிவு

கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கொங்கு தமிழர் பேரவை நிறுவனரும், வழக்கறிஞருமான விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வழக்கை நடத்தக் கேட்டு வந்த பெண்ணிடம் வழக்கறிஞர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 31-வயது பெண் ஒருவர் முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்த நிலையில், கடந்த ஆண்டு பார்த்திபன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த நபர், அப்பெண்ணின் 35-பவுன் நகைகள் மற்றும் ரூ.15-லட்சம் ஆகியவற்றை வாங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

இரண்டாவது கணவரால் ஏமாற்றப்பட்ட அந்த பெண், இது தொடர்பான பிரச்சினைக்காகக் கொங்கு தமிழர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான விஜயகுமார் என்பவரை சந்தித்துள்ளார். இந்த வழக்கினை விஜயகுமார் நடத்தி வந்த நிலையில், அந்த 31-வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் கொங்கு தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனரும், வழகறிஞருமான விஜயகுமார் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். பணம் வாங்காமல் வழக்கை நடத்திக் கொடுப்பதாக உறுதியளித்த விஜயகுமார், ரூ.40-ஆயிரம் வரை பணத்தை வாங்கி இருப்பதுடன், தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகின்றார் எனவும், தனியாக வசிக்கும் தனது வீட்டின் முன்பு சத்தம் போடுவதாகவும், வழக்கு தொடர்பாகப் பேச வேண்டும் என கூறி தனியாக அலுவலகத்திற்கு வரச்சொல்லி தன்னிடம் அத்துமீறியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் காரணமாக வழக்கு தொடர்பாக அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்த நிலையில், தனக்கு உதவும் வேறு வழக்கறிஞர்கள் மீது தன் பெயரில் அவதூறாகக் கடிதம் எழுதி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு வகைகளில் மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஆசைக்கு இணங்க வேண்டும் என அச்சுறுத்தி, மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரினை பெற்ற கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் , வழக்கறிஞர் விஜயகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் உட்பட 3-பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை நடத்தக் கேட்டு வந்த பெண்ணிடம் வழக்கறிஞர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...