கோவை ராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் கொள்ளை..!

இதனிடையே, மாயமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டிலிருந்த 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் முத்துசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஒரு தொழிலதிபர். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 23ம் தேதி ராஜசேகர் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார்.

பின்னர், மூன்று நாட்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர், அவரது வீட்டில் வேலை செய்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண் வேலைக்கு வராமல் இருந்தாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக செல்ல தயாராக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் மாயமானது தெரியவந்தது.

இதனையடுத்து, வீட்டில் பணியாற்றிய வினிதா மீது சந்தேகம் ஏற்பட்டு, வினிதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜசேகர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான வினிதாவை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...