மேலும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய மூன்று நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் காரில் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று (28.02.2022) அதிகாலை சுமார் 1.30 AM மணியளவில் சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை காவல் சுற்றுக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் வனவர் தலைமையில் வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு இன்னோவா (TN 20 AE 8401) சில்வர் நிற வாகனம் சந்தேகத்திற்கு உரிய வகையில் சென்றதைப் பார்த்து வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் வாகனத்தை நிறுத்தாததால் ஏற்கனவே சாலையின் ஓரம் மறைத்து நிற்க வைக்கப்பட்டிருந்த வனத்துறை வாகனத்தின் மூலம் அவர்களைத் துரத்திச் சென்று கோவில் மேடு பகுதியில் அந்த வாகனத்திற்குக் குறுக்கே சென்று நிறுத்தி அவர்களைப் பிடிக்க முயன்ற போது திடீரென காரின் நடுப்புற இருக்கையில் இருந்த மூன்று நபர்கள் காரின் இரு புறமும் கதவுகளைத் திறந்து தப்பியோடிவிட்டனர்.

வனப் பணியாளர்களால் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றும், இருள் சூழ்ந்த இரவு நேரம் என்பதால் பிடிக்க இயலவில்லை. வாகனத்தின் ஓட்டுநர் லக்ஷ்மணன் மற்றும் வாகனத்தின் பின்பக்க இருக்கையில் இருந்த மணி என்பவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மான் மற்றும் காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக வந்ததாக கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து, வாகனத்தை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத ஒற்றை குழல் துப்பாக்கிகள் - 2 Nos மற்றும் வெடிக்காத நிலையில் இருந்த தோட்டாக்கள் - 3 Nos ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (33) மற்றும் சேலம் அரிசி பாளையம் பகுதியை சேர்ந்த மணி (28) ஆகியோர் பிடிபட்ட நிலையில், தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடியவர்களைத் தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.