50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் - ஸ்டாலின் புத்தக விழாவில் ராகுல் காந்தி உரை

50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் என தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தக வெளியிட்டு விழாவில், ராகுல் காந்தி பேசியதாவது,



நம்முடைய ஆட்சி நிலையில் நாம் மிக முக்கியமான நிலையை அடைந்து இருக்கிறோம். என்னுடைய நாடாளுமன்ற உறையைக் கேட்டு இருப்பீர்கள் இந்திய நாடு ஒரு ஒன்றியம்.

காங்கிரஸ் கட்சியை இந்திய அளவில் வலிமையான கட்சியாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தமிழகத்தில் நிகழ்த்த வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன்.

நாம் திமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம். இருப்பினும், நாம் நம்மை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல அஸ்திவாரம் இல்லாமல் மேல் தளம் இருக்காது. அதே போல காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான அஸ்திவாரத்தைச் சேர்க்க வேண்டும்.

கட்சியை நாம் வளர்ப்பதற்கு அடிமட்ட அளவில் வேலை செய்ய வேண்டும். இதை நாம் தீர்க்கமாகச் செய்ய வேண்டும். அந்த அடித்தலத்திற்கு மிக முக்கியமானவர்கள் பெண்கள். அவர்கள் தான் தமிழக பெண்களின் உரிமையையும் பேசுவார்கள்.

50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்த சில குடும்பத்தின் வாரிசுகள் ராகுலை மேடையில் சந்தித்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...