96% வேலைகள் முடிவடைந்ததால் மாமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி விக்டோரியா ஹாலில் நடைபெறும் - மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 2-ந் தேதி காலை 10-மணிக்கு கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்க உள்ளனர்.



கோவை: மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 2-ந் தேதி கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்க உள்ளனர்.

கோவையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்று தி.மு.க. கூட்டணி 96-இடங்களில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், புதிய மாமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் புதுப்பிக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தது.

இதனிடையே, இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கத்தில் பதவியேற்கின்றார்கள் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, 96-சதவீத வேலைகள் நிறைவு பெற்றதால் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டு டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா அரங்கில் பதவியேற்பு விழா வருகிற 2-ந் தேதி காலை 10-மணிக்கு நடைப்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...