கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 86-வது வார்டில் மாநகராட்சி பள்ளி இல்லாததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிப்பு

50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 86-வது வார்டில் மாநகராட்சி பள்ளி இல்லாததால் அப்பகுதி மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 86 வார்டில் அரசு ஆரம்பப் பள்ளியினை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து மாநகராட்சி ஆணையருக்கும், கோவை மாவட்ட ஆட்சியாளருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;

தற்போது செயல்பட்டு வரும், அரசு தொடக்கப்பள்ளியில் 90-மாணவர்களுக்கான வசதிகள் மட்டுமே உள்ளது. தற்போது இப்பள்ளியில் 330-மாணவர்களே படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் 330 மாணவர்கள் கற்பதற்கு மூன்று வகுப்பறைகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது பள்ளி முதல்வரின் அறையை வகுப்பறையாக மாநகராட்சி மாற்றி உள்ளது.



மேலும், 330 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 2 கழிவறைகள் மட்டுமே உள்ளது. இதில் ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும், பயன்படுத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினர்.

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு, 100 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்து வந்த நிலையில் தற்போது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

உக்கடம் ஆத்துப்பாளம் இணைக்கும் மேம்பாலப் பணியால் உயர் கல்விக்காகப் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு பெரும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டு வருகிறது. அருகில் கல்வி இல்லாததால் குனியமுத்தூர் ஒப்பணக்கார வீதி போன்ற இடங்களுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்கள்.

மாநகராட்சியிடம் நிதி இருந்தும் இப்பகுதியில் பள்ளி அமைத்துத் தராததால் கல்வி கற்க நினைக்கும் பிள்ளைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்கடம் புல்லுகாடு பகுதியில் மாநகராட்சியின் குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அடுக்குமாடி கட்டிடத்தில் குடியேறும் மக்களுக்கும் நிச்சயம் கல்வி என்பது அத்தியாவசியமாகிறது ஆகவே இப்பகுதியில் பள்ளி அமைத்துத் தர வேண்டும் என்று கோவையில் பணியாற்றிய மூன்று மாவட்ட ஆட்சியருக்கும் 3 மாநகராட்சி ஆணையாளருக்குத் தொடர்ந்து மனு கொடுத்து வந்த நிலையிலும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இப்பகுதி மாணாக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகச் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உயர் கல்விக்காகத் தனியார்ப் பள்ளிகளுக்கோ அல்லது வெளிப்பகுதியில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கோதான் செல்ல வேண்டியுள்ளது.

பள்ளிகளுக்குச் சென்று படிக்க விரும்பும் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியில் பெருமளவில் இடம் கிடைப்பதில்லை. மேலும், இங்கு வசிக்கும் மக்கள் அரசுக்கு வரிகளைச் சரிவரச் செலுத்திவருகிறோம். ஆனால், இப்பகுதியில் பள்ளி அமைத்துத் தர கோவை மாநகராட்சியும் அரசும் இயன்றளவிலும் முழு வரவில்லை.

இப்பகுதியில் பள்ளி இல்லாததால் கல்வி கற்க இயலாத மாணவிகள் பெருமளவில் சிறுவயதிலேயே கல்யாண வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது சங்கம் அளிக்கும் விதமாக உள்ளது. தற்போது அமையப்பெற்றுள்ள புது ஆட்சியானது நிச்சயம் எங்கள் மீது கருணை காட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...