கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை..!

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ் புரம், பகுதியில் வசிக்கக்கூடிய பைனான்சியர் வீட்டில் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வீரகேரளம் அருகே உள்ள பொங்காளி ஊரை சேர்ந்தவர் நரேஷ் குமார் (36), பைனான்சியரான இவருக்கு சொந்தமாக வீடு ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ளது.

இந்நிலையில், நரேஷ்குமார் அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற நரேஷ் குமார் வீட்டின் பீரோவிலிருந்த பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...