கோவை தாளியூரில் புதிதாக வரவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கடை வரும் இடத்திற்கு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை தாளியூரில் புதியதாக வரவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை வருகிறது என்ற தகவலையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கடை வரும் இடத்திற்கு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.



இதனையடுத்து, இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.



அதற்குள் பொதுமக்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு டாஸ்மாக் கடை இங்கு வரக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் கூறும்போது, இங்கு அதிக தோட்ட பகுதியுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் என பலரும் இந்த வழியாக செல்கின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். ஊராட்சியில் டாஸ்மாக் கடை வரக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது.

மேலும், கிராம சபா கூட்டத்திலும் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு டாஸ்மாக் வந்தால் நாங்கள் சாலைமறியல் தான் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி டாஸ்மாக் இங்கு வராது. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் புகார் அளிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...