உக்ரைனில் இருக்கும் தங்களது குழந்தைகளை மீட்டு வர வலியுறுத்தி பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: உக்ரைனில் இருக்கும் தங்களது குழந்தைகளை மீட்டு வர வலியுறுத்தி கோவை பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் யாரேனும் அவரது பிள்ளைகள் உறவினர்கள் உக்ரைனில் இருந்தால், அவர்களை மீட்டு வர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அல்லது இணைய வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.



இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (கோவில் அர்ச்சகர்) அவரது மகளை உக்ரைனில் இருந்து மீட்டு வர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



இது தொடா்பாக அவா் அளித்த மனுவில், அவரது மகள் ஐஸ்வர்யா உக்ரைனில் PETRO MOHYLA BLACK SEA NATIONAL UNIVERSITY ல் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வருவதாகவும், அங்கு நடைபெற்று வரும் போரின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மகளை மீட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று, இடிகரை பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் தனது மகன் சரத் சந்திரன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் பதுங்கு குழியில் எவ்வித வசதியும் இல்லாமல் தவித்து வருவதாக சரத் தெரிவித்ததால் உடனடியாக தனது மகனை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும் படி மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...