கோவையில் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது மோசடி வழக்கு

சரவணம்பட்டி போலீசார் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஊழியர் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியில் மாலை முரசு பத்திரிகை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை கிளை மேலாளர் துரை பிரகாஷ் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கோவை சிவானந்த புரத்தைச் சேர்ந்த என்.சுரேஷ் குமார் என்பவர் போட்டோகிராபராகவும் விளம்பர முகவராகவும் கடந்த 9-ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு அரசியல் பிரமுகர்களின் விளம்பரங்களை சுரேஷ்குமார் வாங்கி மாலை முரசு இதழில் வெளியிட்டு உள்ளார்.

அதற்கான மொத்த தொகையான 15-லட்சத்து 98-ஆயிரத்து 391-ரூபாயை நிறுவனத்திற்குச் செலுத்தாமல் பல மாதங்களாக இருந்து வந்துள்ளார். நிறுவனம் சார்பில் பலமுறை அவரிடம் கேட்டும் சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் விளம்பரம் கொடுத்த விளம்பரதாரர்கள் இடம் கேட்டபொழுது விளம்பரத்திற்கு உரியத் தொகையை சுரேஷ்குமார் இடம் கொடுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விவரங்களை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து சுரேஷ்குமார் இடம் கேட்டபோது சரியாகப் பதில் சொல்லாமல் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வேலைக்கு வராமல் இருந்து வருகிறார். எனவே சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுத்து விளம்பரதாரர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் நிறுவனத்தை ஏமாற்றிய 15-லட்சத்து 98-ஆயிரத்து 390- ரூபாயை மீட்டுத்தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சுரேஷ்குமார் விளம்பரதாரர்கள் கொடுத்த பணத்தை வாங்கி அலுவலகத்திற்குக் கட்டாமல் மோசடி செய்ததை உறுதி செய்தார்.

தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சுரேஷ்குமார் மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...