கிணத்துக்கடவில் நாட்டு இன காளைகளை பாதுகாக்க ரேக்ளா பந்தயம்

கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில், நாட்டு இன காளைகளை பாதுகாக்க ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் மற்றும் கல்லாபுரம் கிராம மக்கள் சார்பில் இன்று சிங்கையன் புதூர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.



இந்தப் பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டு இன காளைகள் பங்கேற்றது.



200-மீட்டர், 300-மீட்டர் தூர கணக்கில் நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை காளை மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் கண்டு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

அழிந்து வரும் நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், நாட்டு மாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும் இந்த ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் சிவன்மலை கோபால் மற்றும் ரேக்ளா சங்கத்தலைவர் காளிமுத்து ராஜன் தெரிவித்தனர்.

இந்த பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...