பொள்ளாச்சியில் பள்ளி மழலைகள் மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம்

ரஷ்யா- உக்ரைன் இடையே நடக்கும் போர் மழலை குழந்தைகளையும் பாதித்துள்ள இந்த நிலையை மாற்ற அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போரை நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மழலைகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் பள்ளி மழலைகள் மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் இடையேயான போர், கடந்த சில தினங்களாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் ஆயுதப் போர் நிலவி வரும் சூழலில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த போரை நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் போராட்டங்களை நடத்தி போருக்கான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி ஆலாங்கடவு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போரை நிறுத்த வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி திருச்சூர் சாலையில் உள்ள ஆலாங்கடவு பகுதியில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையான போரை உடனே நிறுத்த வேண்டும், அமைதி சூழல் நிலவ வேண்டும் என்று மழலைகள் எழுப்பிய கோஷங்கள் அவ்வழியாக வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து, மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மழலைகளுக்கு அவ்வழியே சென்ற பொதுமக்கள் பிஸ்கட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் இடையே நடக்கும் போர் மழலை குழந்தைகளையும் பாதித்துள்ள இந்த நிலையை மாற்ற அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போரை நிறுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மழலைகள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...