காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டத்தின் போது செல்போன் திருடியதாகச் சிறுவன் உட்பட 4-பேர் கைது

காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டத்தின் போது செல்போன் திருடியதாகச் சிறுவன் உட்பட 4-பேர் கைது செய்யப்பட்டு, 8-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.



கோவை: காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டத்தின் போது செல்போன் திருடியதாகச் சிறுவன் உட்பட 4-பேர் கைது செய்யப்பட்டு, 8-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மகத்திருத்தேர் விழா கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.



இத்திருவிழாவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனைத் தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது குறித்துத் தொடர்ந்து காரமடை காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், திருடு போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்(வயது 19), கார்த்திக்(வயது 21), அருண்(வயது 19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை பிடித்து போலீஸ் பாணியில் விசாரணை செய்ததில் அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகச் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...