கோவை ஈச்சனரி அருகே கோழி ஏற்றி சென்ற வேன் மோதி - இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி

கோவை ஈச்சனரி அருகே கோழி லோடு ஏற்றி சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (26) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


கோவை: கோவை ஈச்சனரி அருகே கோழி லோடு ஏற்றி சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (26) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் எல்லப்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஜய் 26. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில், தர நிர்ணய பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று பணி நிமிர்த்தமாக, கோவை கிணத்துக்கடவு வந்த அவர், பணி முடிந்து இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈச்சனாரி பைபாஸ் அருகே வந்த போது, கேரளாவிற்கு கோழி லோடு ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்ற ஈச்சர் வேன், விஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்த, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...