டாப்சிலிப் அருகே காலில் காயத்துடன் தவித்துவரும் காட்டு யானை: மருத்துவ உதவி செய்ய வனத்துறை நேரில் சென்று ஆய்வு

டாப்சிலிப் பகுதியில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: டாப்சிலிப் அருகே காலில் காயத்துடன் தவிடித்துவரும் காட்டு யானை, மருத்துவ உதவி செய்ய வனத்துறை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்- பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில், காட்டு யானைக் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், நடக்கமுடியாமல் கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாகத் தெரிய வந்தது.

இதனால் யானை உணவைத் தேட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, டாப்சிலிப் பகுதியில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

யானையின் நிலை குறித்து அறிந்தவுடன் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...