பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,100-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரை சோதனை செய்தபோது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் காரில் இருந்த 50-கிலோ எடை கொண்ட 22-மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1100-கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,100-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகே உள்ள காந்தி ஆசிரமம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியோடினர்.

இதையடுத்து, காரை சோதனை செய்தபோது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



போலீசார் காரில் இருந்த 50-கிலோ எடை கொண்ட 22-மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1100-கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...