கோவையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ், சுழற்கோப்பை வழங்கி கௌரவிப்பு

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில், ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இதில், சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், சிறப்பாக பணிபுரிந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கௌதம், நிலைய பதிவேடுகளைச் சிறப்பான முறையில் பராமரித்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலர் ரஞ்சித் குமார், சிறந்த முறையில் CCTNS-ல் கோப்புகளை பதிவேற்றம் செய்த காரமடை காவல் நிலைய தலைமை காவலர் வர்கிஸ், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்துத் திறம்படச் செயல்பட்ட பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய நீதிமன்ற தலைமை காவலர் நவநீதகிருஷ்ணன், பெண்கள் உதவி மையத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய தடாகம் காவல் நிலையம் பெண் காவலர் இந்து பிரியா, மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை அதிக அளவில் கண்டுபிடித்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவலர் ரஞ்சித் குமார், ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக ஆனைமலை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சுழற்கோப்பையை ஆனைமலை காவல் உதவி சின்னக்காமணனுக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வழங்கி கௌரவப்படுத்தினார்.



ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...