உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு..!

உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும், போர் தீவிரமாகும் முன்பாக தங்கள் மகனை மீட்டு வர வேண்டும் என்றும் மனு.


திருப்பூர்: உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள சூழ்நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த இந்திராணி பன்னீர்செல்வம் தம்பதியினரின் மூத்த மகன் அரவிந்த் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கக் கூடிய சூழ்நிலையில் போர் துவங்குவதற்கு முன்பாகவே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் போர் தொடங்கி விட்டதால் டிக்கெட் ரத்தாகியிருப்பதாகவும், தற்போது விடுதியில் உள்ள பாதாள அறைகளில் தங்கி இருப்பதாகவும், உணவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் போர் தீவிரமாகும் முன்பாக தங்கள் மகனை மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இன்று மனு அளித்தனர்.

இதேபோல், திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்த வாசு - சித்ரா தம்பதியினரின் மகன் முத்தையாலு சபரிஷ் அதே கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருவதாகவும், தங்கள் மகனையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தொலைபேசி வாயிலாக நமது செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு மாணவர்களும் தற்போது வரை அப்பகுதியில் பதற்றம் மிக அதிக அளவில் இல்லை எனவும் தொடர்ந்து தூதரகத்திலிருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தாங்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும் தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...