பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக்கோரி தர்ணா போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவுக்கு, கெட்டிமேளம்புதூரை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது, அக்கிராமத்தில் உள்ள மளிகைக்கடை அருகே நின்றிருந்த போது அவ்வழியாக காரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராசு உள்ளிட்ட சிலர் அரவிந்தை வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியும், ஜாதி பெயரைச் சொல்லித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, ராசு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அரவிந்தின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் சார் ஆட்சியர் தாக்ரே -சுபம்-ஞானதேவ் - ராவ் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...