கோவையில் ஓய்வூதியம் தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஓய்வூதியம் தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.



தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று 7-இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்ட அவர்கள் கடந்த 6-ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற பஞ்சப்படி உயர்வைக் கடந்த 76-மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாகவும், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் உடனடியாக அரசு ஓய்வூதிய பிரநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் அது வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...