கோவையில் ஆமை வேகத்தில் நடக்கும் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் - வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!

இதனிடையே, தண்ணீர் குழாய் அமைக்கும் இப்பணியானது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் என்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் தகவல்.


கோவை: கோவையில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் இழுபறியாக உள்ளதால், ஸ்டேட் பாங்க் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.



கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ரோடு, மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று தண்ணீர் குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் குழி தோண்டப்பட்ட நிலையில், இன்றளவிலும் பணிகள் நிறைவடையாமல் இருப்பது பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக பல மாதங்களாக தோண்டிய குழியினை மூடாமல் இருப்பதால் மோசமான நிலையில் இச்சாலை உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும், அவசர சிகிச்சைக்கு அவ்வழியாகச் செல்லும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் போய் சேர்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ரயில் நிலையம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் கோயம்புத்தூர் தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலையம் ஆகியவை இந்த சாலையை ஒட்டியே உள்ளன. ஆனால் அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.



மேலும், சமீபகாலமாக அச்சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் சில நாட்களாக கழிவுநீர் சாலையில் ஓடத் தொடங்கியது.

இது குறித்து கோவை துணை ஆணையர் கூறியதாவது:-

தண்ணீர் குழாய் அமைக்கும் இப்பணியானது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் என்றும், இன்று இரவு கழிவுநீர் கால்வாய் மூடப்படும் என்றும், நெடுஞ்சாலை துறை நாளை சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்திடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...