கோவை அவிநாசி சாலை மேம்பால அமைப்பில் சாய்வுதளம் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்..!

ரூ. 1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என தகவல்.


கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அமைப்பில் சாய்வுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

விமான நிலைய சாலை, அவிநாசி சாலை மற்றும் காளப்பட்டி சாலை சந்திப்பை கடக்கும் வகையில் இந்த மேம்பால தளங்கள் அமைக்கப்படும் என கூறினார். ரூ.1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேம்பாலத்தின் பிரதான பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சாலை சந்திப்புகளில் உள்ள மேம்பாலம் அமைப்பதற்கான தூண்களை கட்டும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் சாலையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இதற்காக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து விட்டதால், பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளின் நியமனத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 திட்டங்கள் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை உள்ளடக்கியதாக உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...