யூடியூபில் ஆபாச பதிவிட்ட 'ரவுடி பேபி' சூர்யா குண்டர் சட்டத்தில் கைது: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா கள்ளக்காதலன் சிக்கா என்கின்ற சிக்கந்தர் ஆகியோர் நடத்திவரும் யூடியூபில் மதுரையைச் சேர்ந்த குடும்பத்தினரை ஆபாசமாகப் பதிவிட்டு பேசி வந்த காரணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டன.

கடந்த வாரம் சிக்கா என்ற சிக்கந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இன்று ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு சிறைக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சைபர் கிரைம் குற்றவாளியான சுப்ரமணியபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரது மகன் சிக்கந்தர் என்கிற சிக்கா(வயது-49) மற்றும் சுப்புலட்சுமி என்கிற சூர்யா ஆகியோர்கள் சமூக வலைத்தளமான YouTube Channel-லில் ஆபாசமாகப் பதிவிட்ட காரணத்திற்காகக் கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி மேற்படி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேற்படி வழக்கில் தொடர்புடைய பாலவிநாயகம் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...