மத்திய பிராவிடண்ட்‌ பண்ட்‌ ஆணையாளருக்கு கொடிசியா கோரிக்கை

சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி ஆணையாளருக்கு கொடிசியா கோரிக்கை வைத்துள்ளது.


கோவை: மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி ஆணையாளருக்கு சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின் தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக கொடிசியா கோரிக்கை வைத்துள்ளது.

சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி' ஆணையாளருக்கு கொடிசியா கீழ்க்கண்ட கோரிக்கைகளை அளித்துள்ளது.

1.இபிஎப்‌ சட்டம்‌ 1952-பிரிவு 6-ன்படி, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ இயல்பு மற்றும்‌ நிதி நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு தொழிலாளர்‌ மற்றும்‌ நிறுவன உரிமையாளர்‌ பங்களிப்பை 10% என்று வரையறுக்க வேண்டும்‌. இது 20 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளுக்கும்‌ பொருந்தும்படி வகை செய்ய வேண்டும்‌.

2.இபிஎப்‌ சட்டம்‌ 1952 பிரிவு 7Q-ன்படி தற்போது 12% வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால்‌ வங்கிகள்‌ போன்றவை தற்போது 8.5 முதல்‌ 8.75% வரை வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதைக் கவனத்தில்‌ கொண்டு, நமது சட்டத்திலும்‌ தகுந்த திருத்தம்‌ கொண்டுவர வேண்டும்‌.

3.கோவிட்‌ தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 - 2021, 2020 - 2022) பல சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ கடமையான நிதி சிக்கல்‌ மற்றும்‌ உற்பத்தி குறைவு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பிஎப்‌ தொகைக்குச் செலுத்த வேண்டிய பங்களிப்பு தாமதமாகும்‌ போது விதிக்கப்படும்‌ தண்டத்‌ தீர்வை குறைக்கப்பட வேண்டும்‌.

4.தவிர்க்க இயலாத சூழலில்‌ ஒரு சிறு குறு தொழில்‌ நிறுவனம்‌ இயங்காமல்‌ மூடப்படும்‌ போது, அதற்குத் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும்போது, அந்த நிறுவனத்திற்கான "Closure" மற்றும்‌ “No Due’ சான்றிதழ்கள்‌ தாமதமின்றி அறிவிக்கப்பட வேண்டும்‌.

5.இபிஎப்‌ சர்வரில்‌ ஏற்படும்‌ சிக்கலால்‌, ஆன்லைன்‌ நாமினேஷன்‌ பதிவு செய்வது இயலாமல்‌ போவதால்‌, குடும்ப பென்ஷன்‌ பெறுவது தாமதமாவதைத் தவிர்க்க நேரடியாக நாமினேஷன்‌ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்‌.

6.உச்ச நீதிமன்ற ஆணை SLP NO.811/2011-ன்படி, பயணப்படி என்பது தொழிலாளர்‌ சம்பளத்தின்‌ ஒரு பகுதியாகாது என்பதால்‌, அதற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌.

7.50% ஊதியத்திற்கு மேல்‌ பிஎப்‌ தொகை செலுத்தும்‌ நிறுவனங்களைக் கூடுதல்‌ பங்களிப்பு தொகை செலுத்துமாறு வலியுறுத்தாமல்‌ இருக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

எனவே மேற்கண்ட கோரிக்கைகள்‌ குறித்துப் பரிசீலித்துச் சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கொடிசியாவின்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...