பணநாயகம் வென்றுவிட்டது.. உண்மை உழைப்பு தோற்றுவிட்டது..!! பொள்ளாச்சியில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் அதிமுக வேட்பாளர்!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வேட்பாளர், வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.


கோவை: பொள்ளாச்சியில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் முரட்டுக்காளை முரளி என்பவர் வீடுவீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 22.2.22 எண்ணப்பட்டது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வேட்பாளர்கள் பெரும்பான்மையான வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். எதிர்க்கட்சியான அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 31 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் 2 வார்டுகளில் சுயட்சைகளும், 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 26வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முரட்டுக்காளை முரளி என்கின்ற பழனிக்குமார் ஒரு முறை நகர மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.

தற்போது நடைபெற்ற தேர்தலில் முரட்டுக்காளை முரளி(எ) பழனிக்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சாந்தலிங்க குமார் என்பவர் போட்டியிட்டார். இதில் 13 வாக்குகள் வித்தியாசத்தில் சாந்தலிங்ககுமார் வெற்றி பெற்றார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த முரட்டுக்காளை முரளி வீடு வீடாகச் சென்று இந்த தேர்தலில் பண நாயகம் வென்றுவிட்டது.



உண்மை, உழைப்பு தோற்றுவிட்டது, எனக்கு வாக்களித்த 26வது வார்டு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார். இவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...