முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள்: கோவை கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கல்..!

இந்த விழாவில் பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு காந்திநகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் கிளை சார்பில் கொண்டாடப்பட்டது.

காந்தி நகர் கிளை செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.



இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிளை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் ஆறுமுகம், அங்கமுத்து, கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, அம்மா பேரவை பொருளாளர் சிங்,கற்பகம் கதிர்வேல், ஆறுச்சாமி, செந்தில்குமார், வெங்கடேஷ், பெரியசாமி, தீபா, சாந்தி, நாகரத்தினம், இந்திராணி, கேபிள் ஆனந்த், கலாமணி வரதராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...