கோவை மாவட்டத்தில், வரும் மார்ச் மாதம் 12ம் தேதி லோக் அதாலத் விசாரணை..!

வழக்கில் தீர்வு காண விரும்பும் வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில், வரும் மார்ச் மாதம் 12ம் தேதி லோக் அதாலத் விசாரணை நடக்கிறது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேங்கியுள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண்பதற்கு, மக்கள் நீதிமன்ற விசாரணை (லோக் அதாலத்) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில், மார்ச் 12ல் நடக்கிறது.

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, காசோலை மோசடி, சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு, தொழில் தகராறு வழக்குகள், வங்கி கடன் நிலுவை, நுகர்வோர் நீதிமன்றம் வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்ட நிலுவை வழக்குகளில் தீர்வு காணலாம்.

இதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மார்ச் 1 முதல் 12 வரை சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கில் தீர்வு காண விரும்பும் வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...