கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!

கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தம்பி என்ற ரவிசந்திரன் (49). இவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கடந்து 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, வழக்கு நடந்து வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதில், சிகிச்சை பலனளிக்காமல் ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...