மக்கள் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு..!

கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாக புகார்.


கோவை: மக்கள் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் .

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இதையடுத்து செய்தியாளருக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின் போது:-

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உண்மையான தீர்ப்பை வழங்க முடியாமல், கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இதனால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். மக்கள் ஜனநாயக ரீதியாக சொந்த தீர்ப்பை அளிக்க முடியாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்ததால் தான் இந்த நிலை. எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது, திமுக ஆட்சியின் அடக்கு முறைக்கு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இதுபோன்ற சம்பவங்கள் கைவந்த கலை. இதற்கு அதிமுக அஞ்சாது. இது ஜனநாயகத்தின் கொடுமை. விரைவில் இதற்கு பதில் சொல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...