கோவை மாநகராட்சியில் 86-வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிட்ட மொத்தம் 97-வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், 86-வார்டுகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நிறைய பேர் டெபாசிட் இழந்தனர்.

கோவையில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 22-ஆம் தேதி நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில், கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, கோவை மாநகராட்சியில் 96-இடங்களை திமுக கூட்டணி வெற்றி பெற்று, மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 100-வார்டுகளில், 3-வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மீதம் ஒரு வார்டு எஸ்.டி.பி.ஐ கட்சி வசம் சென்றது.

இந்த நிலையில், பாஜக போட்டியிட்ட மொத்தம் 97-வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், 86 வார்டுகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் படு தோல்வி அடைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 97-வார்டுகளில் போட்டியிட்டு 86-வார்டுகளில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வார்டு 5, 6, 8, 9, 20, 22, 25, 26, 27, 55, 56, 57, 58, 61 என 86-வார்டுகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

அதே போல், 100 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 14-வார்டில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தனர். கோவை மாநகராட்சியில் வார்டு 2, 8, 10, 11, 16, 17, 22, 25, 46, 54, 55, 57, 59, 84, 86 வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...