திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி துவக்கம்..!

வரும் 2ம் தேதி மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.



திருப்பூர்: திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 2011 முதல் 2016 வரை மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், 2016க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் மாமன்ற கூட்ட அரங்கு மற்றும் மேயர் அலுவலகம் செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2ம் தேதி அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.



அதன் பின்பு, மாதந்தோறும் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ள சூழ்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...